மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்டிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2,000 வீதம் இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் பயனாளிகள் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும், மேலும் அதே தேதிக்கு முன் தங்கள் e-kyc புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாங்கி கணக்குடன் இணைப்பது எப்படி…?
முதலில் நீங்கள் PM Kisan Samman Nidhi கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையைப் பார்வையிடவும். அடுத்து உங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை மற்ற ஆவணங்களுடன் வங்கி அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும். பிரதமர் கிசான் ஆதார் வங்கிக் கணக்கை இணைப்பதை அதிகாரி செயல்படுத்துவார். உங்கள் விவரங்கள் இப்போது சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்ததும் உங்கள் மொபைல் போனில் ஒரு செய்தியைப் பெறுவீர்கள். அதன் பிறகு ஆதார் இணைந்து விட்டது உறுதியாக விடும்.
ஆன்லைனில் eKYC புதுப்பிப்பது செய்வது எப்படி..?
முதலில் pmkisan.gov.in என்ற இணையத்திற்கு செல்ல வேண்டும். பிறகு eKYC-இன் இணைப்பு வலது பக்கத்தில் காணப்படும். அங்கு ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மொபைலில் 4 இலக்க ஓடிபி வரும் அதை உள்ளிடவும். அடுத்து உங்கள் eKYC செயல் முடிக்கப்படும். ஒரு வேலை தவறானது என்று வந்தால் நீங்கள் ஆதார் சேவை மையத்திற்குச் சென்று சரி செய்து கொள்ளலாம்.