fbpx

விவசாயிகளுக்கு சூப்பரான அறிவிப்பு…! குறைந்த விலையில் இது வழங்கப்படும்…! ஆட்சியர் தகவல்..‌.

தருமபுரி வேளாண்மை பொறியியல் துறை மூலமாக குறைந்த வாடகைக்கு வழங்கப்படும் பல்வேறு புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்று பயன்பெறலாம்.

தமிழ்நாடு அரசு வேளாண்‌ பெருமக்கள்‌ நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள்‌ பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண்‌ பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறை பல்வேறு புதிய, நவீன வேளாண்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ கருவிகள்‌ வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில்‌ விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத்‌ தரக்கூடிய வேளாண்‌ இயந்திரங்களான 2 மண்‌ தள்ளும்‌ இயந்திரங்கள்‌, 7 டிராக்டர்கள்‌, 2 சக்கர வகை மண்‌ அள்ளும்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ தேங்காய்‌ பறிக்கும்‌ இயந்திரம்‌ ஆகியவை வாடகைக்கு தயாராக உள்ளது. மேலும்‌, மண்தள்ளும்‌ இயந்திரம்‌ மூலம்‌ நிலம்‌ சமன்‌ செய்தல்‌, டிராக்டர்‌ மூலம்‌ உழவு பணி, கொழுகலப்பை, சட்டி கலப்பை, ஒன்பது கொழுகலப்பை, சுழற்கலப்பை) கரும்பு அல்லது காய்கறி நாற்று நடவு செய்தல்‌, நிலத்தில்‌ நிலக்கடலை பயிரை தோண்டி எடுத்தல்‌, சோளத்தட்டை அறுவடை செய்யும்‌ கருவி உள்ளிட்ட பல்வேறு வேளாண்‌ பணிகளை மேற்கொள்வதற்கும்‌ டிராக்டரால்‌ இயங்கக்கூடிய மேற்காணும்‌ கருவிகள்‌ வேளாண்‌ பொறியியல்‌ துறையில்‌ வாடகைக்கு உள்ளன. தமிழக அரசு வேளாண்‌ இயந்திரங்களின்‌ வாடகையை 25.10.2021 முதல்‌ திருத்தி அமைத்துள்ளது.

அதன்படி, டிராக்டரால்‌ இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும்‌ டிராக்டருடன்‌ மணிக்கு ரூ.400-க்கும்‌ மண்தள்ளும்‌ இயந்திரம்‌ மூலம்‌ நிலம்‌ சமன்‌ செய்ய மணிக்கு ரூ.970-க்கும்‌ சக்கர வகை மண்‌ அள்ளும்‌ இயந்திரங்கள்‌ மணிக்கு ரூ.760-க்கும்‌ மற்றும்‌ தேங்காய்‌ பறிக்கும்‌ கருவி மணிக்கு ரூ.650-க்கும்‌ விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன. எனவே, வேளாண்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ கருவிகள்‌ தேவைப்படும்‌ விவசாயிகள்‌ கீழ்க்கண்ட முகவரியில்‌ உள்ள வேளாண்மைப்‌ பொறியியல்‌ துறையின்‌ உபகோட்‌ட அலுவலகத்தினை அணுகி பயன்படுத்தி கொள்ளலாம். தொடர்புக்கு கீழ்கண்ட அலைபேசி எண்களில்‌ தொடர்பு கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளே கவனம்... வரும் 25-ம் தேதி முதல் இது கட்டாயம்...! இல்லை என்றால் சிக்கல்...

Mon Oct 3 , 2022
அக்டோபர் 25 முதல், டெல்லியில் உள்ள பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்புவதற்கு மாசு கட்டுப்பாட்டில் (PUC) சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்படும். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது: வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை சமாளிக்க, குளிர்கால செயல் திட்டத்தில் கூட நடவடிக்கை எடுப்பது வழக்கம். இது தவிர, ஒரு புதிய வளர்ச்சி உள்ளது, அது இன்னும் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டு, குளிர்காலத்தில் […]
அதிர்ச்சி..! தமிழக போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

You May Like