fbpx

X: விவசாயிகள் போராட்டம்!… மத்திய அரசின் உத்தரவில் உடன்பாடில்லை!… எக்ஸ் நிறுவனம் காட்டம்!

X: சில குறிப்பிட்ட எக்ஸ் கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி உத்தரவிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று எக்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். இதில் விவசாயிகளை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் நடத்தி வரும் பேரணியுடன் தொடர்புடைய 177 சமூக வலைதள கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி, எக்ஸ்’ நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து, ‘எக்ஸ்’ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில குறிப்பிட்ட எக்ஸ் கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி மத்திய அரசு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த உத்தரவுக்கு மதிப்பளித்து, அந்த கணக்குகளை இந்தியாவில் மட்டும் முடக்கி உள்ளோம். மத்திய அரசின் நடவடிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த பதிவுகளுக்கும் கருத்து சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு அளித்து இருப்பதால் அது குறித்து மேற்கொண்டு பேச முடியவில்லை. அந்த உத்தரவின் நகலையும் வெளியிட முடியவில்லை.

தன்னிச்சையான முடிவு ஆனால் அவற்றை வெளியிடுவது அவசியம் என கருதுகிறோம். இல்லாவிட்டால் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதை தடுக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கையை தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காங்., பொது செயலர் ஜெய்ராம் ரமேஷ், நாட்டில் ஜனநாயக படுகொலை நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

English summary: Social Media Company X has issued a statement saying that we do not agree with the central government’s actions in ordering the temporary freezing of certain accounts.

Readmore: “காங்கிரஸ், ஆம் ஆத்மியின் I.N.D.I.A கூட்டணி தலைநகரில் MODI மேஜிக்கை தடுக்குமா.?” – கடந்த தேர்தல்களின் முழு விவரம்.!

Kokila

Next Post

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! உங்கள் பள்ளிகளில் இன்று Aadhaar முகாம்..!!

Fri Feb 23 , 2024
இன்று பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் ஆகியவற்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது. இந்நிலையில், ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று (பிப்ரவரி 23) முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. பள்ளிகளில் படிக்கும் […]

You May Like