fbpx

#Tngovt: விவசாயிகளுக்குதமிழக அரசு சார்பில் ரூ.10,000 மானியம்…! எப்படி விண்ணப்பிப்பது…?

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதிலாக மானியத்துடன்‌ கூடிய புதிய மின்‌ மோட்டார்‌ வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ விவசாயிகளின்‌ நிலத்தடி நீர்‌ பாசனத்துக்கு உதவும்‌ வகையில்‌ சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ மற்றும்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ வாங்குவதற்கும்‌ தமிழக அரசு வேளாண்மை பொறியியல்‌ துறை மூலம்‌ 61 பேருக்கு தலா ரூ.10,000, வீதம்‌ ரூ.6.10 இலட்சத்திற்கு மானியம்‌ வழங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஏற்கனவே மின்‌ இணைப்பு பெற்றுள்ள 3 ஏக்கர்‌ குறைவாக உள்ள விவசாயிகள்‌ பழைய திறனற்ற மின்மோட்டார்‌ பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவர்கள்‌, புதிய ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு அமைத்து 10 குதிரை திறன்‌ வரை புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள்‌ பட்டா, சிட்டா, அடங்கல்‌, நில வரைபடம்‌, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய விவரங்களுடன்‌ அருகில்‌ உள்ள வேளாண்மை பொறியியல்‌ துறை செயற்பொறியாளர்‌, உதவி செயற்பொறியாளர்களை அணுகலாம்‌.

Vignesh

Next Post

இன்று இந்த 14 மாவட்டத்தில் மட்டும்...! வெளுத்து வாங்க போகும் கனமழை...! வானிலை மையம் கணிப்பு....

Thu Nov 10 , 2022
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழ்நாடு, புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த நகரக்கூடும். இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் […]

You May Like