fbpx

புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி…..! மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் விவசாய சங்கம்…..!

உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஒரு மாத காலமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக இவருக்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன.

இந்தப் புகார்கள் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பூஷன் சிங் மீது வழக்கப்பதிவு செய்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும் இவரை கைது செய்ய வேண்டும் என்றும் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் பீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வீரர்களின் இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் முக்கிய அமைப்புகள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஹரியானா உத்தர பிரதேசம் பஞ்சாப் போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாய அமைப்புகள் இந்த வீரர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளது. இன்று டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் அதனை நோக்கி பேரணி நடத்தப்போவதாக வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே டெல்லியின் பிரதான பகுதிகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. இத்தகைய நிலையில், பாரதிய கிசான் சங்க விவசாய அமைப்பின் முன்னணி தலைவரான ராகேஷ் திகாயத் டெல்லி காவல்துறையினருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது டெல்லியில் வீரர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் களமிறங்குவார்கள் நாடாளுமன்ற நோக்கி மல்லித்த வீரர்களின் பேரணியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் காசிப்பூர் எல்லையில் கூட இருக்கின்றோம்.

டெல்லியில் குவிக்கப்பட்டிருக்கின்ற காவல் துறையினரை திரும்பப் பெறவில்லை என்றால் நாங்கள் டிராக்டர் மூலமாக கிளம்பி டெல்லியில் பல்வேறு எல்லைப் பகுதிகளை முற்றுகையிட்டு நுழைவோம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். அமைதிப் பேரணிக்கு நிர்வாகம் அனுமதி வழங்கி இருக்கின்ற நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு டெல்லி ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் எல்லைகளிலும் பாதுகாப்புகள் அதிகரித்து இருக்கிறது ராகேஷ் திகாயத்தின் அறிவிப்பை தொடர்ந்து, கண்காணிப்பு மேலும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது

Next Post

புதிய நாடாளுமன்றம்…..! மக்களை புதிய வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லட்டும் பிரதமர் நரேந்திரமோடி.,..!

Sun May 28 , 2023
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மக்களவையில் செங்கோலை நிறுவிய பிரதமர் நரேந்திரமோடி, இதுகுறித்து தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு இருப்பதால் நம்முடைய மனம் பெருமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருக்கிறது. கனவுகளை நினைவாக்கட்டும் இந்த புதிய கட்டிடம் நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்லட்டும் என்று பதிவிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் புதிய நாடாளுமன்ற […]

You May Like