fbpx

வேகமாக எடை குறைய, சீறுநீரக கல்லைக் கரைக்கும் வாழைத்தண்டு!… ஹெல்த் டிப்ஸ் மற்றும் ரெசிபிகள் இதோ!

உடலுக்கு மிக மிக ஆரோக்கியத்தை அளிக்கும் வாழைத்தண்டின் நன்மைகள் குறித்து இதில் காண்போம்.

வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாமே நிறைவான நன்மைகளை தரக்கூடியவை. இதன் ஒவ்வொரு பகுதியும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளால் நிறைந்துள்ளது. வாழை இலையில் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் சீராகும். வாழைப்பழங்கள் பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலம். வாழைப்பூ நீரிழிவு மற்றும் வயதான எதிர்ப்பு குணங்களுக்கு நன்மை செய்கிறது

வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் நிறைந்தவை இது புண்கள் அல்லது வயிற்றில் அமிலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாழைப்பழங்கள் போன்று வாழைத்தண்டுகளும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவற்றை கொண்டுள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது தசைகள் சேதமில்லாமல் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாழைத்தண்டு கூட்டாகவோ. பச்சையாக சாலட் செய்தோ, பொரியலாக்கியோ, எளிதான முறையில் சாறாக்கியோ குடிக்கலாம். வாழைத்தண்டு உடலுக்கு செய்யும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

வாழைத்தண்டு சாறினையோ அல்லது பொரியலாகவோ கூட்டாகவோ உணவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வடிவில் எடுத்துக் கொண்டே வந்தீர்கள் என்றால், உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகள் வெளியேறும். உடல் புத்துணர்ச்சியாகவும் லேசாகவும் மாறிவிடும்.வாழைத்தண்டு சாறினை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், விரைவில் சிறுநீரகக் கற்கள் கரைந்து விடும் அல்லது சிறுநீரின் வழியே வெளியேறிவிடும். அப்படி குடிக்கும் வாழைத்தண்டு சாறில் இரண்டு பச்சை ஏலக்காயை தட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி குடிக்கும்போது கற்கள் உள்ளிருக்கும்போதும், வெளியேறும்போது ஏற்படுகின்ற வலி கட்டுப்படும்.

வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால், அதிகமாகப் பசி எடுக்காது. உடல் எடையைக் குறைக்க பலரும் பல்வேறு வழிகளைப் பின்பற்றுவார்கள். ஆனால் வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும். வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.வாழைத்தண்டில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் பி6-ம் அதிக அளவில் இருக்கிறது. அதனால் ரத்தத்தில் ஹீமாகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை குணமாக்குகிறது.

Kokila

Next Post

கோடை வெயிலை சமாளிக்க உதவும் முலாம் பழம்!... இதய ஆரோக்கியம், எடை இழப்புக்கும் உதவும்!... நன்மைகள் ஏராளம்!

Sat Mar 11 , 2023
கோடைக்காலத்தில் உட்கொள்ளவேண்டிய முலாம் பழத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. முலாம் பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது, இது வெப்பமான கோடை காலத்தில் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக்கி, வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கொண்டுள்ளது. முலாம்பழம் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் உடல் நோய்களை எதிர்த்துப் போராடுவதை எளிதாக்குகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் […]

You May Like