fbpx

செவ்வாய் தோஷத்தால் இன்னும் திருமணம் ஆகவில்லையா.! இந்த விரதம் இருங்க போதும்.!?

தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் திருமணமாகாமல் பல கேள்விகளை எதிர் கொண்டு வருகின்றனர். இதில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்வது மிகவும் கடினமான ஒன்றானதாக இருந்து வருகிறது. ஜாதகத்தில் பொருத்தங்கள் இருந்தாலும் செவ்வாய் தோஷத்தினால் திருமணங்கள் நடைபெறாமல் தள்ளிப் போவது உண்டு. இதற்கு விநாயகரை வழிபடுவதன் மூலம் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

செவ்வாய் தோஷத்தை விரட்டும் சக்தி விநாயகருக்கு உண்டு. விநாயகர் கடவுளின் தீவிர பக்தரான பரத்துவாச முனிவர் தல யாத்திரை சென்றிருந்தார். அங்கே நர்மதை நதியில் நீராடிய போது அழகிய மங்கை ஒருவரை கண்டார். இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு அங்காகாரன் என்ற அழகிய குழந்தை பிறந்தது.

விநாயகர் மேல் பற்றுள்ள அங்ககாரன், தேவர்களைப் போல் வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மேலும் செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் விநாயகரை வேண்டுபவர்களுக்கு பிணி நீங்கி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும் வரம் கேட்டார். அவர் கேட்டபடியே விநாயகரும் வரம் அளித்தார்.

இதன்படியே செவ்வாய்க்கிழமை அன்று விநாயகரை வழிபட்டு, சதுர்த்தி விரதம் இருந்து வந்தால் உடலில் ஏற்பட்ட பிணிகள் நீங்கும். மேலும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகருக்கு விரதம் இருந்து வர தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும். மேலும் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்ப்பதற்கு முன்பு செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதை குறித்து பார்ப்பது மிகவும் அவசியமாகும். மாப்பிள்ளை அல்லது பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷமாக கூறப்பட்டு வருகிறது. இத்தகைய ராசிக்காரர்கள் விநாயகரை வழிபட்டு விரதம் இருந்து வந்தால் உடனே திருமணம் நடைபெறும்.

Rupa

Next Post

ஆட்டுப்பால் குடிப்பதால் உடலில் இவ்வளவு நன்மைகளா.? என்னென்ன தெரியுமா.!?

Sun Jan 21 , 2024
உலக அளவில் மாட்டு பாலை விட தற்போது ஆட்டுப்பால் தான் அதிகளவு மக்கள் பருகி வருகின்றனர். ஆட்டு பாலில் மாட்டுப் பாலை விட அதிக அளவு ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய குணங்களும் உள்ளன என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஒரு சிலருக்கு மாட்டு பால் குடிப்பதனால் ஒவ்வாமை ஏற்படலாம். அப்படிப்பட்ட நபர்கள் மாட்டு பாலை தவிர்த்து விட்டு ஆட்டுப்பால் குடித்து வரலாம். எருமை மற்றும் பசுவின் பாலில் உள்ள கொழுப்பு வகைகளை ஒப்பீடு […]

You May Like