fbpx

நாய்களை விட்டு கடிக்க வைத்து.! மகளின் காதலனுக்கு வரவேற்பு கொடுத்த கொடூர தந்தை.! வைரல் வீடியோ.!

பிரிட்டனைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளின் காதலன் அவரை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது நாய்களை வைத்து கடிக்கச் செய்த கொடூர சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இங்கிலாந்தில் குடியேறிய இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தின் மூலமாக பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

#Britain #dog attack #cruel pic.twitter.com/uxdnssx7lK

— daemon targariyen (@daemon_targar) December 10, 2023

அப்போது அந்தப் பெண் தனது காதலனை வீட்டிற்கு வருமாறு அழைப்பு கொடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காதலியை சந்திப்பதற்காக அந்த இளைஞரும் வீட்டிற்கு சென்றுள்ளார். தனது மகளின் காதலன் வீட்டிற்கு வருவதை கண்டு ஆத்திரம் அடைந்த தந்தை தனது நாயை ஏவி விட்டு அந்த இளைஞரை கடிக்கச் செய்திருக்கிறார்.

அவரது நாய் அந்த இளைஞரை ஆவேசமாக தாக்குவதையும் அதனால் அந்த இளைஞர் துடிப்பதையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றமும் செய்திருக்கிறார் அந்த கொடூரத் தந்தை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

Next Post

"நான்லா வியாபாரம் ஆகமாட்டேனா உனக்கு."? டைலாக் புகழ் ரெடின் கிங்ஸ்லிக்கு டும் டும் டும்.! இணையதளத்தில் வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!

Sun Dec 10 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லீ. கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். டாக்டர், ஜெய்லர், பத்து தல, காஞ்சுரிங் கண்ணப்பன் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 46 வயதான இவர் தற்போது பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக […]

You May Like