தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைஃபாத் என்ற பகுதியில் ஃபாசித் கான் என்பவர் வசித்து வருகிறார்.. இவருக்கு சனா என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர்.. பாசித் கான் ஒரு ஆட்டோரிக்ஷா டிரைவர் என்றும், அவரின் குடும்பம் சைபாபாத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.. பாசித் கானின் மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக, 4 பெண் குழந்தைகள் பிறந்ததாலும், நிதி நெருக்கடியாலும் அவர் விரக்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தனது வீட்டில் 3 வயது குழந்தையை ஃபாசித்கான் இரும்புக் கரண்டியால் அடித்ததால் அக்குழந்தை கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.. கழிவறையில் தண்ணீரை வீணாக்கியதால் ஆத்திரமடைந்த தந்தை தனது குழந்தையின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது…
குழந்தை நீண்ட நேரம் கழிவறையில் இருந்ததால், ஆத்திரமடைந்த பாசித் கான், சமையலறையில் இருந்து இரும்புக் கரண்டியை எடுத்துக்கொண்டு, கழிவறைக்குச் சென்று அந்தப் பெண்ணின் தலையில் அடித்துள்ளார்.. அவரின் மனைவி தடுக்க முயன்றும், அவர் அவர் தொடர்ந்து குழந்தையை தாக்கி உள்ளார். இதையடுத்து குழந்தையை தூங்க வைக்கும் போது, குழந்தையின், வாயில் நுரை வருவதைக் கண்டு, அவரின் தாய் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்,’ என்று தெரிவித்தனர்..
குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சைபாபாத் போலீசார் மருத்துவமனைக்கு வந்து சனாவிடம் வாக்குமூலம் பெற்று ஃபாசித் கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது..