எடப்பாடி அருகே தூங்கிக் கொண்டிருந்த மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் எருமைப்பட்டி ஊராட்சியில் உள்ள வெட்டுக்காடு பகுதியில் வசிக்கும் விவசாயி ராஜி (65) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களது மகன் ஜெயப்பிரகாஷ், அவரது மனைவி, குழந்தைகளுடன் திருச்செங்கோட்டில் எக்ஸ்பிரஸ் கொரியர் நடத்திக்கொண்டு அங்கேயே வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டையால் மனைவி அவரது தாயார் வீடான சங்ககிரியில் தங்கியிருந்து விட்டு கடந்த 21ஆம் தேதி ரேசன் பொருட்களை வாங்குவதற்காக வெட்டுக்காட்டில் உள்ள மாமனார் மாமியார் உள்ள வீட்டில் இரவு தங்கியுள்ளார்.
அன்று நள்ளிரவில் மருமகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்ற மாமனார் ராஜி, மருமகளை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்து போன மருமகள், அவரது தாய் மற்றும் கணவரிடம் நடந்ததை எடுத்துக் கூறிவிட்டு கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் மாமனார் மீது புகாரளித்தார்.
இதையடுத்து, கொங்கணாபுரம் போலீசார் மாமனார் ராஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மருமகளை கற்பழித்த மாமனார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இச்சம்பவம் கொங்கணாபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.