நாமக்கல் அருகே, மருமகளை படுக்கைக்கு அழைத்து தொந்தரவு செய்த மாமனார் மீது காவல் நிலையத்தில், புகார் வழங்கிய மருமகளால், மாமனாருக்கு உடந்தையாக இருந்த மாமியாரும் தலைமறைவு காவல் துறையினர் வலை வீச்சு.
நாமக்கல் மாவட்டம் வள்ளியம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் சந்திரசேகர் (25).இவர் அமெரிக்காவில் கேட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நதியா(20) இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்த சில தினங்களிலேயே, கணவர் சந்திரசேகர் அமெரிக்காவிற்கு சென்று விட்டதால், நதியா தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான், நதியாவின் மாமனார் அவரிடம், பல சமயங்களில் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அத்துடன், மருமகளிடம் சொத்து, பணம் உள்ளிட்டவற்றை தருவதாக தெரிவித்து, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இது தொடர்பாக நதியா தன்னுடைய மாமியாரிடம் பலமுறை தெரிவித்தும், இதை அவருடைய மாமியார் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனாலும், ஒருபுறம் மாமனார் தொடர்ந்து அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியிருக்கிறார். இதனால், அதிர்ச்சி அடைந்த மருமகள், உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். இந்த புகாரை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருக்கின்ற மாமனார் மற்றும் மாமியார் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.