நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில் தாயும், மகளும் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். இதற்கிடையே மாணவியின் தாய், அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் நியாசுதீன் (41) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். ஆனால், நியாசுதீனுக்கு மகள் முறை கொண்ட கல்லூரி மாணவி மீது ஒரு கண் இருந்துள்ளது.
தாய் வெளியே சென்ற நேரங்களில் நியாசுதீன் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் கூற கூடாது எனவும் அவர் மிரட்டியுள்ளார். இந்த கொடுமை தாங்காத மாணவி, தனது தாயிடம் இது பற்றி கூறி அழுதுள்ளார். இதையடுத்து, துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், நியாசுதீனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.