fbpx

லேட்டாக சமைத்த மகள்; குக்கரால் அடித்தே கொன்ற கொடூர தந்தை…

குஜராத் மாநிலம், சூரத் நகர், சவுக் பஜார் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான முகேஷ் பர்மர். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு, திருமணமாகி 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் முகேஷ் ஆட்டோ ஓட்ட செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவரது மனைவி வேலைக்கு செல்வதால், இவரது 18 வயது மகள் ஹெடாலி வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய், மகள் ஹெடாலியிடம் தந்தை முகேஷுக்கு சமைத்து கொடுக்கும் படி கூறிவிட்டு சென்றுள்ளார்.

இதற்க்கு சம்மதம் தெரிவித்த ஹெடாலி, சமைக்காமல் வேறு வேலைகளை செய்து கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முகேஷ், ஹெடாலியிடம் ஏன் இன்னும் சமைக்கவில்லை என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் மகள் ஹெடாலியும், தனது தந்தையிடம் பதிலுக்கு பதில் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த முகேஷ், சமையலறையில் இருந்த குக்கரை எடுத்து ஹெடாலியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த ஹெடாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹெடாலியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு முகேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: வாய் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..

English Summary

father-killed-her-daughter-for-cooking-late

Next Post

திருவண்ணாமலை நிலச்சரிவு: சிறுவன் உள்பட இருவரின் உடல் மீட்பு..!

Mon Dec 2 , 2024
Tiruvannamalai Landslide: Rescue of two bodies including a boy..!

You May Like