fbpx

மொட்டை மாடி பிரச்சனையால் வெறியான தந்தை..!! மகளை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்..!! தாய்க்கும் நேர்ந்த சோகம்..!!

மொட்டை மாடியில் தூங்குவது தொடர்பான பிரச்சனையில் பெற்ற மகளை தந்தை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வருபவர் ராமானுஜ் சாஹூ. இவரின் மனைவி ரேகா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், 19 வயது மகள் இருந்துள்ளார். கோடை காலம் என்பதால் மொட்டை மாடியில் தூங்க சென்றிருக்கிறார் ராமானுஜ். அப்போது அவரின் மகளும் மொட்டை மாடியில் தூங்க சென்றுள்ளார். இதனால் மொட்டை மாடியில் படுத்து தூங்குவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆத்திரத்தில் ராமானுஜ் தனது மகளைக் கடுமையாக திட்டியுள்ளார்.

அப்போது மகன்கள் இருவரும் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்கள். ஆனாலும் ஆத்திரம் தீராத ராமானுஜ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து மகளை சரமாரியாக வெட்டத் தொடங்கியிருக்கிறார். இதை பார்த்ததும் அலறி அடித்துக் கொண்டு மகன்கள் ஓடி இருக்கிறார்கள். தந்தையின் கொலை வெறியை பார்த்து அவரின் அருகே நெருங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இதை பார்த்ததும் மனைவி பதறி அடித்துக் கொண்டு கணவரை தடுத்திருக்கிறார். அவரையும் சரமாரியாக குத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாது மனைவியின் விரல்களை வெட்டி வீசி இருக்கிறார். ரத்த வெள்ளத்தில் விழுந்து துடி துடித்து மகள் சாகும் வரைக்கும் ஆவேசமாக வெட்டி இருக்கிறார் ராமானுஜ்.

இந்த கொடூர கொலை சம்பந்தமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றன. இந்த வழக்கில் கொலையாளி ராமானுஜ்ஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். படுகாயம் அடைந்த மனைவி ரேகா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Chella

Next Post

தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிப்பு...!

Thu Jun 1 , 2023
தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை தமிழக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2022 மார்ச் 31- உடன் முடிவடைந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதித்தணிக்கை அறிக்கையை இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தமிழ்நாடு ஆளுநரிடம் சமர்ப்பித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக, இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 151(2)-ன் படி இந்திய தலைமைக்கணக்கு அதிகாரி இந்த அறிக்கையை மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளதாக முதன்மை கணக்குத்தணிக்கை அலுவலர் நெடுஞ்செழியன் வெளியிட்ட […]
’தமிழ் மக்கள் போல் தமிழில் பேச வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்’..! ஒருநாள் தமிழில் பேசுவேன்..! ஆளுநர்

You May Like