fbpx

பெற்ற மகளை 9 மாதங்களாக பலாத்காரம் செய்த தந்தை..!! புகாரளிக்க வந்த தாயிடம் சமாதானம் பேசிய தாய்..!! சென்னையில் பயங்கரம்..!!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, இவரை தந்தையும் அண்ணன் முறையான பெரியப்பா மகனும் சேர்ந்து 9 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் 4 நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த புகாரின் மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”எனக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் என் கணவருக்கும் குடும்பத் தகராறு என்பதால் நான் அவரை விட்டு பிரிந்து 6 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் 2 ஆண்டுகளாக என் கணவருடன் எனது மாமியார் வீட்டில் வசித்தார்.

இந்த 2 ஆண்டுகளில் என் மகள் பூப்பெய்த நாள் முதல் 9 மாதங்களாக, சிறுமியின் தந்தையும் சிறுமிக்கு அண்ணன் முறையாகும் பெரியப்பா மகனும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையே புகார் கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. நானும் என் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு காவல் நிலையத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால் அந்த கொடுமைக்காரர்களை இதுவரை கைது செய்யவில்லை. என் பிள்ளை வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. இதனால் நான் காவல் நிலையத்திற்கு சென்று “நீங்கள் புகாரை எடுக்கிறீர்களா.. இல்லை ஸ்டேஷன் வாசலில் உயிரை விடவா” என கேட்டேன். அதற்கு அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர், ஒரு பேப்பரை தூக்கி போட்டு “இந்தா இதில் புகாரை எழுது” என கூறினார். நானும் சிறுமியின் தந்தை, அண்ணன் பெயரை போட்டு நடந்தவற்றை எழுதிக் கொடுத்தேன்.

அப்போது அங்கிருந்த பெண் போலீஸ், “ஏம்மா அதான் அந்த அண்ணன்காரன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டானே, பெத்த அப்பன்தானே மன்னித்துவிட்டுவிடு.. இதை ஏன் பெரிதுப்படுத்துறே” என கேட்கிறார்கள். என் குழந்தைக்கு நீதி வேண்டும். என் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது” என்று சிறுமியின் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

Read More : விஜயகாந்த் திரைப்பட பாணியில் ஊசி மூலம் உடலில் காற்றை ஏற்றி கொலை..!! காவலுக்கு காத்திருந்த மாமியார், மருமகள்..!!

English Summary

“I want justice for my child. My child’s health is very poor,” the girl’s mother tearfully pleaded.

Chella

Next Post

கள்ளக்காதலுக்காக இப்படி இறங்கிட்டாங்களே..!! நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்..!! கம்பி எண்ணும் காதலியின் பின்னணி..!!

Fri Nov 22 , 2024
A friendship developed between her and her husband's friend, which eventually turned into love.

You May Like