fbpx

பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன்..!! போக்சோ-விற்கு பயந்து விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு அருகே கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட். இவருக்கு 23 வயதில் தீனா என்ற மகன் இருந்தார். இவர் கட்டிட தொழிலாளி ஆவார். 11-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியை ராபர்ட் காதலித்து வந்ததாகவும், இருவரும் நெருங்கி பழகியதில் மாணவி 6 மாத கர்ப்பமானதாகவும் புகார்கள் எழுந்தது.

மாணவி கர்ப்பமானது அவரது பெற்றோருக்கு ஒரு கட்டத்தில் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஊர் பெரியவர்களிடம் சென்று மகள் கர்ப்பமானது குறித்து நியாயம் கேட்டு முறையிட்டுள்ளார்கள். அதன்பேரில் நேற்று காலை ஊர் பெரியவர்கள் தீனாவை அழைத்து விசாரித்துள்ளார்கள்.

இதனால் மாணவி கர்ப்பமானது குறித்து தன்மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்வார்களோ என்று அச்சம் அடைந்த தீனா, விசாரணைக்கு பயந்து தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் தீனாவை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கட்டிட தொழிலாளி தீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Read more ; 100 GB வரை இலவச Storage.. ஜியோ பயனர்களுக்கு அதிரடி சலுகை..!! – முகேஷ் அம்பானி அறிவிப்பு

English Summary

Fearing a police investigation in connection with a school girl’s pregnancy incident near Vellore, her boyfriend committed suicide

Next Post

பெரிய ஆபத்து? மணிக்கு 38,453 கிமீ வேகம்.. பூமியை நெருங்கும் விண்கல்..!! நாசா எச்சரிக்கை

Thu Aug 29 , 2024
NASA scientists have warned that a 45-foot-wide meteorite is about to fly close to Earth

You May Like