fbpx

11 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணங்களில் 50 சதவீதம் திருப்பி வழங்கப்படும்…!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களின் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணங்களில் 50 சதவீதம் திருப்பி வழங்கப்படும்.

தமிழக அரசின் கல்வி உதவித்தொகை..!! இன்று முதல் தொடக்கம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!!

இதேபோல், சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். முன்னாள் ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்கள், மாநில அரசின் ஊக்கத் தொகை பெற்றவர்கள் ஆகியோர் இந்த கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு தகுதியானவர்கள்.

பெற்றோரின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு 2020-21 நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்விக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சைனிக் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில், சைனிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் அவர்களது கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை (ஆண்டிற்கு ரூ.40,000க்கு மிகாமல்) மத்திய அரசு வழங்கும்.

Vignesh

Next Post

இந்து சமய அறநிலையத் துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு…! தமிழ் தெரிந்தவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Sat Feb 4 , 2023
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள நாதஸ்வரம், தவில், தல்லம், சுருதி, உதவி அர்ச்சகர்,இலை விபூதி போத்தி ஆகிய காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என ஆறு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் நன்றாக பேசுவோம் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு […]

You May Like