fbpx

தமிழகமே…! நாளை முதல் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு அமல்…! ரூ.10,000 வரை செலுத்த வேண்டும்…! முழு விவரம்…

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளன.

பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள்‌ கடந்த 20வருடங்களுக்கு மேலாக மாற்றம்‌ செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால்‌ வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும்‌ ஆவணத்தினை பாதுகாத்தல்‌, மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள்‌ வழங்குதல்‌ போன்ற சேவைகளைப்‌ பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில்‌ பதிவுச்சட்டம்‌, 1908-இன்‌ பிரிவு 78-இல்‌ கட்டண விவரஅட்டவணையில்‌ உள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும்‌ சில ஆவணப்‌ பதிவுகளுக்கான பதிவு மற்றும்‌ முத்திரை கட்டண வீதங்களும்‌ திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம்‌ 20 ரூபாயில்‌ இருந்து 200 ரூபாய்‌ எனவும்‌, குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட்‌, பாகம்‌ மற்றும்‌ விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம்‌ 4 ஆயிரம்‌ ரூபாயில்‌ இருந்து 10 ஆயிரம்‌ ரூபாய்‌ என மாற்றப்பட்டவுள்ளது.

மேலும்‌, அதிகபட்ச முத்திரை தீர்வை 25ஆயிரம்‌ ரூபாயில்‌ இருந்து 40 ஆயிரம்‌ ரூபாய்‌ எனவும்‌, தனி மனை பதிவிற்கானகட்டணம்‌ 200 ரூபாயில்‌ இருந்து ஆயிரம்‌ ரூபாய்‌ எனவும்‌, குடும்ப உறுப்பினர்கள்‌ அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு பதிவுக்‌ கட்டணம்‌ 10 ஆயிரம்‌ ரூபாய்‌ என்று உள்ளதை சொத்தின்‌ சந்தை மதிப்பிற்கு ஒரு விழுக்காடு எனவும்‌ மாற்றியமைப்பது உள்ளிட்டவை இதில்‌ அடங்கும்‌. இவை, நாளை முதல்‌ நடைமுறைக்கு வரவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கொங்கு மண்டலத்திற்குள் நுழையும் சசிகலா..!! பீதியில் எடப்பாடி..!! வெளியான பரபரப்பு அறிவிப்பு..!!

Sun Jul 9 , 2023
எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்துவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடு என மாஸ் காட்டி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு எதிராக கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே சசிகலாவும், அதிமுகவை ஒன்றிணைப்பதாக கூறி வருகிறார். இந்நிலையில், மீண்டும் தனது சுற்றுப் பயணத்தை சசிகலா தொடங்க உள்ளார். இது தொடர்பான […]

You May Like