கொலம்பியாவில் காணொலி வாயிலான நீதி விசாரணையின்போது படுக்கையில் உள்ளாடையுடன் புகைப்பிடித்துக் கொண்டிருந்த பெண் நீதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேவலமான புகைப்படங்களை வெளியிடுவதில் பெயர் பெற்றவர் நீதிபதி விவியன் பொலானியா (34). இவர், கார் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டுமா? என்பது குறித்த விசாரணையில் இருந்தார். இந்த விசாரணை ஆன்லைனில் நடைபெற்றது. அப்போது, பெட்ரூமில் படுத்துக் கொண்டு உள்ளாடையுடன் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. இதையடுத்து, பெண் நீதிபதி விவியன் பொலானியா 3 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”தனக்கு குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் கவலையாக இருந்ததால், விசாரணையின் போது படுக்கையில் இருந்ததாக” கூறியுள்ளார். இதற்கிடையே, ”நீதிபதி தனது சொந்த வீட்டின் வசதிகள் மற்றும் பொது விசாரணைக்கு தகுந்த முறையில் தயார்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தபோதும், இத்தகைய இழிவான சூழ்நிலையில் தன்னை முன்னிலைப்படுத்தியதற்கு எந்த நியாயமும் இல்லை” என நீதித்துறை ஒழுங்கு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.