fbpx

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37.0% ஆக உயர்வு…!

நாட்டில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 2023 ஆம் ஆண்டில் 37.0 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 9-ம் தேதி அன்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை 2022-23-ன் படி, நாட்டில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 2023 ஆம் ஆண்டில் 4.2 சதவீதத்தில் இருந்து 37.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நீண்டகால சமூக-பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கொள்கை முன்முயற்சிகள் மூலம், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்வதற்காக அரசு நிர்ணயித்த தீர்க்கமான செயல்பாடுகளின் விளைவாக, பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதத்தில் இந்த குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.

பெண் கல்வி, திறன் மேம்பாடு, தொழில் முனைவோருக்கான வசதி, பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட பெண்களின் வாழ்க்கைச் சுழற்சியில் அரசின் முன்முயற்சிகள் விரிவடைந்துள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

TVS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Sun Oct 15 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த IPR Search Analysis பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். […]

You May Like