fbpx

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் சரியாக!… இந்த கஷாயத்தை டிரை பண்ணுங்க!… உடனடி தீர்வு!

காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் மிளகு கஷாயம். தயாரிக்கும் எளிய முறையை பற்றி தெரிந்துகொள்வோம்.

பொதுவாக சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்றாக மிளகு உள்ளது. இந்த கருமிளகை பிளாக் கோல்ட் என்றும் அழைக்கப்படுகிறது. து நெடி ஏற்றும் லேசான காரமான சுவை கொண்டது, இது பல்வேறு உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பழங்கால ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மாசுபாடு, சிகரெட் புகை மற்றும் சூரியக் கதிர்கள் போன்றவற்றின் மூலம் ஒருவருக்கு அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல்கள் உருவாகலாம். இது உங்களுக்கு வீக்கம், முன்கூட்டிய முதுமை, இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஒருவர் கருப்பு மிளகு எடுத்து கொள்வது நல்லது. கருப்பு மிளகாயில் பைபரின் என்றழைக்கப்படும் தாவர கலவை நிறைந்துள்ளது, இது சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருப்பு மிளகில் ஏராளமான விட்டமின்கள், தயமின், ரிபோப்ளவின், விட்டமின் சி, ஈ, பி6 மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. அதே மாதிரி ஜிங்க், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. பல நன்மைகள் தரும் இந்தமிளகு கஷாயத்தை எப்படி தயாரிப்பது குறித்து தெரிந்துகொள்வோம். மிளகு கஷாயம் தயாரிக்க: கருப்பு மிளகு, துளசி, பனை வெல்லம், சர்க்கரை மற்றும் தண்ணீர் போன்ற பொருட்கள் தேவைப்படுகிறது.

செய்முறை: கடாயை அடுப்பில் வைத்து அதில் கருப்பு மிளகை போட்டு வெடிக்கும் வரை நன்றாக வறுத்து அதை நன்றாக பொடியாக்கி கொள்ளுங்கள். இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். உடைத்த மிளகு அதனுடன் துளசி, பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு ஒரு வடிகட்டியைக் கொண்டு கஷாயத்தை வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த கஷாயத்தை குடித்து வந்தால் ஜீரணமின்மை, இருமல் மற்றும் சளி அறிகுறிகள் குறையும்.

Kokila

Next Post

அசைவ உணவுகளை தவிர்த்திடுங்கள்!... காரணம் என்ன?... கோடைக்கால ஆரோக்கிய டிப்ஸ் இதோ!...

Mon Mar 6 , 2023
கோடைக்காலத்தில் அதிக வெப்பத்தை உண்டாக்கும் அசைவ உணவுகளுக்கு மாற்றாக பழங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்’ நிறைந்த பானங்களை அதிகம் குடிக்கலாம். சில தினங்களில் கோடைக்காலம் தொடங்கவுள்ளது. இதனால், படிப்படியாக வெயில் அதிகரிக்கும். இதன் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும் நமது உடல் மற்றும் சரும ஆரோக்கியங்கள் அதிக கவனம் செலுத்துவது அவசியமான ஒன்று. இந்தநிலையில், வெப்பத்திலிருந்து நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உணவு சார்ந்த விஷயங்களில் கவனமுடன் இருப்பது மிகவும் முக்கியம். […]

You May Like