fbpx

வருமான வரி கணக்கு தாக்கல்..!! சிக்கலில் மாட்டிக்காதீங்க..!! அதிரடியாக களமிறங்கிய மத்திய அரசு..!!

வருமான வரியை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், அடுத்த அதிரடியை தற்போது கையில் எடுத்துள்ளது.

வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதியாகும். வருமான வரியை தவறாமல் அனைவரும் செலுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தியும் கூட, வரி ஏய்ப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுகின்றனர்.

அதனால்தான், மத்திய அரசு இதற்கும் ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது. அதன்படி, வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித்துறை புதிய சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி, யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்கிறார்களோ, அவர்கள் மீது 200% வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாக செய்திகளும் வெளியாகியிருந்தது.

இதுவரை சுமார் 22,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை 31ஆம் தேதியுடன், சுமார் 6.77 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது, வருமான வரித்துறையில் மக்களின் வருமானதோடு ஒப்பிட்டு அதிகப்படியான தொகை செலுத்தி அவர்களுக்கு தொகையை திருப்பி அளித்து வருகிறது… இதைத்தவிர, வரி கணக்கில் முரண்பாடு உள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் வருகிறது.

அதாவது வருமான வரி தாக்கல் செய்பவரின் நிதி பதிவு மற்றும் பரிவர்த்தனை பதிவுகள் ஆகிய இரண்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. ஒருவேளை, அதில் முரண்பாடுகள் இருக்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இதுவரை சுமார் 22,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வருமான வரி செலுத்துவர், துறைக்கு உரிய பதிலை அளிக்க வேண்டியிருக்கும்.

Chella

Next Post

மோசமான இசை கச்சேரி..!! ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாலியல் தொல்லை..!! கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!

Mon Sep 11 , 2023
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நேற்று முதல் நடைபெற்றது. கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற இருந்த இந்த இசை கச்சேரி மழையால் ரத்து செய்யப்பட்டு நேற்றைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை என்றாலே ஈசிஆர், ஓஎம்ஆர் சாலை வெறிச்சோடி காணப்படும். ஈசிஆர் சாலையில் ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி நடைபெற்றதால், அவ்வழியாக தேவையற்ற வேலைகளுக்காக பயணிக்க வேண்டாம் என சென்னை போக்குவரத்து காவல்துறை […]

You May Like