fbpx

திரைப்பட விளம்பரத்துக்கும் இது கட்டாயம்…! மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…! மத்திய அரசு அதிரடி

திரைப்பட விளம்பரங்களில் கட்டாயம் சான்றிதழ் வகையை குறிப்பிட வேண்டும் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

இது குறித்து மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்ட செய்தி குறிப்பில்: தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு மத்திய சான்றளிப்பு வாரியம் (சிபிஎஃப்சி) வழங்கும் தணிக்கை சான்றிதழின் வகையை விளம்பரங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அது அறிவுறுத்தியுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் (ஏ சர்டிபிகேட்) வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பார்ப்பதற்கான திரைப்படங்களுக்கு யூஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது. திரைப்பட (சான்றிதழ்) விதி 1983-ன் கீழ் இந்த சான்றிதழ்கள் திரைப்பட சான்றளிப்பு வாரியத்தால் வழங்கப்படுகின்றன.

திரைப்படங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடும் போது, எந்த சான்றிதழ் வகையைச் சேர்ந்த திரைப்படம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. யூ சான்றிதழை தயாரிப்பாளர் விரும்பினால் விளம்பரங்களில் வெளியிட்டுக் கொள்ளலாம். தணிக்கை சான்றிதழ் வகையை குறிப்பிடத் தவறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

மக்கள் அச்சம்...! தேசிய தலைநகரில் மீண்டும் நிலநடுக்கம்...! ரிக்டர் அளவு 5.4 ஆக பதிவு...!

Sun Nov 13 , 2022
தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். ஆரம்ப அறிக்கையின்படி, நடுக்கம் கிட்டத்தட்ட 5 வினாடிகள் நீடித்தது. நொய்டா மற்றும் குருகிராம் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது மற்றும் […]

You May Like