fbpx

திருட்டுத்தனமாக படம் எடுத்தால்…! 3 லட்சம் அபராதம் + 3 ஆண்டு சிறை தண்டனை…! மத்திய அரசின் புதிய சட்டம்…!

திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 இம்மாத தொடக்கத்தில் மக்களவையில் ஒப்புதல் பெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா 27 ஜூலை 2023 அன்று மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. 1952-ம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் கடைசியாக 1984-ம் ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டதால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சில மதிப்பீடுகளின் அடிப்படையில் திரைத்துறைக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் சினிமா திருட்டு அச்சுறுத்தலை முற்றிலுமாகத் தடுப்பதை இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. குறைந்தபட்சம் 3 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதோடு தணிக்கை செய்யப்பட்ட மொத்த உற்பத்தி செலவில் 5% வரை அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

அடுத்த 3 ஆண்டுகளில் நமது திரைப்படத் துறை 100 பில்லியன் டாலராக வளர்ந்து, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும். மாறிவரும் காலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சினிமா திருட்டைத் தடுக்கவும், திரைத்துறையை மேலும் மேம்படுத்தவும் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம். திரைத்துறைக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் சினிமா திருட்டின் அச்சுறுத்தலை இந்த திருத்தங்கள் முழுமையாகத் தடுக்கும் என்றார். மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்.

Vignesh

Next Post

வெள்ளி கிரகத்தின் மேகங்களில் ஏலியன்கள்..!! பூமியில் கிடைக்கும் பொருள் அங்கும் இருக்கா..? அதிரவைக்கும் நாசா ஆய்வாளர்..!!

Mon Aug 28 , 2023
மனித சமூகம் கடந்த சில நூற்றாண்டுகளாகவே வேற்றுகிரக வாசிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. மனிதன் நிலவில் கால் வைத்தது முதல் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வரை என அனைத்துமே வேற்றுகிரக வாசிகளை தேடும் ஒரு அங்கம்தான். விண்வெளியில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு சின்ன உயிரினம் இருந்துவிடாதா என்று தொடர் ஆய்வுகளை செய்து வந்தாலும், இதுவரை அவர்களால் எந்த ஒரு ஏலியனையும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்க […]

You May Like