fbpx

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: “அயோத்தி நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை..” நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு.!

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க இருக்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வின் நேரடி ஒளிபரப்பிற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது.

மேலும் தமிழகத்தில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட ராமர் கோவில்களில் கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு பூஜைகள் பஜனைகள் மற்றும் அன்னதானம் போன்றவை ஏற்பாடு செய்யப்படவில்லை என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் இது தொடர்பாக தனது ‘X’ வலைதள பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் ” மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வின் நேரலை ஒளிபரப்பை தமிழகத்தில் தடை செய்து இருக்கிறது. மேலும் தமிழகத்தில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் போன்றவற்றிற்கும் அனுமதி இல்லை. மேலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோவில்களிலும் விழாக்களை ரத்து செய்யுமாறு காவல்துறையினர் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

Next Post

ராமர் கோயில் கும்பாபிஷேகம்..!! தமிழ்நாட்டிற்கும் நாளை பொது விடுமுறை கொடுங்க..!! ஓபிஎஸ் கோரிக்கை..!!

Sun Jan 21 , 2024
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்துக்கள் வணங்கும் தெய்வமான பகவான் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்திய நாட்டு மக்களின் விருப்பமாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு அவருக்கு பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. இந்த […]

You May Like