fbpx

அடுத்த 5 ஆண்டில் ரூ.35,000 கோடி திட்டம்…! மத்திய அரசு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்…!

ரூ.35,000 கோடி மதிப்புள்ள பன்முக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க ரயில்வே விகாஸ் நிகாம் உடன் ஆர்.இ.சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் அடுத்த 5 ஆண்டுகளில், ஆர்.வி.என்.எல் நிறுவனம் செயல்படுத்தவுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.35,000 கோடி வரை நிதியளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் பன்னோக்கு போக்குவரத்துத் திட்டங்கள், ரயில் உள்கட்டமைப்பு திட்டங்கள், சாலை, துறைமுகம் மற்றும் ஆர்.வி.என்.எல் தொடர்புடைய மெட்ரோ திட்டங்களை உள்ளடக்கியது. கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் அஜய் சவுத்ரி மற்றும் ஆர்.வி.என்.எல் நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரிவு இயக்குநர் ராஜேஷ் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

எரிசக்தி அமைச்சகத்தின் கீழ், 1969 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான ஆர்.இ.சி, உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், பேட்டரி சேமிப்பு மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய மின்-உள்கட்டமைப்பு துறைக்கு நீண்டகாலக் கடன்கள் மற்றும் பிற நிதிச் சேவைகளை வழங்குகிறது.

Vignesh

Next Post

திருமண வாழ்வில் மனைவியிடம் உடல் சுகம் பெறுவதற்கு கணவன் இப்படி செய்யலாமா..? ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

Thu Jan 4 , 2024
திருமண வாழ்வில் மனைவியிடம் உடல் சுகம் பெறுவதற்காக, அவரை வலுக்கட்டாயமாக விருப்பத்துக்கு மாறாக வக்கிர செயல்களில் கணவர் ஈடுபட தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண்கள் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய உரிமை உள்ளது என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. கணவன்-மனைவி இடையே தாம்பத்திய உறவில் எழும் பிரச்சனைகள் பல நேரங்களில் சண்டையிலும், விவகாரத்திலும் முடிகிறது. கணவன் அல்லது மனைவி தாம்பத்திய உறவை விரும்பாத சூழலில், அது பின்னாளில் சிக்கலை […]

You May Like