fbpx

ரூ.45 லட்சம் வரை நிதியுதவி..!! இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை..!! மத்திய இணையமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் ஒன்றை அளித்தார். அதில், பணியின்போது வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், உடல் உறுப்புகளை இழந்த வீரர்கள், காணாமல்போன வீரர்களின் வாரிசுகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாரிசுகளுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக வழங்கப்படுகிறது. பள்ளி செல்வதற்கான பேருந்து கட்டணம், ரயில் கட்டணம், பள்ளி, கல்லூரிகளில் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கான விடுதிக் கட்டணம் முழுமையாக வழங்கப்படுகிறது. புத்தகங்கள் வாங்க ஓராண்டுக்கு ரூ.2,000, சீரூடைக்கு ரூ.700 அளிக்கப்படுகிறது.

போரில் உயிரிழந்த வீரர்களின் மனைவிகள், போரில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் சுகாதார திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், மத்திய பெட்ரோலிய துறை சார்பில் வழங்கப்படும் பெட்ரோல் நிலையங்கள், சமையல் காஸ் விநியோகஸ்தர் உரிமங்களில் 8 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், மத்திய நிதித் துறை, பொருளாதார விவகாரத்துறையின் காலி பணியிடங்களில் குரூப் சி பதவிகளில் 14.5 சதவீதம், குரூப் டி காலி பணியிடங்களில் 24.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பணியின்போது உயிரிழந்த ராணுவ அதிகாரிகள், வீரர்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. ராணுவ அறக்கட்டளையில் இருந்து ரூ.8 லட்சம் இழப்பீடும், குடும்பத்தினருக்கு முழு ஓய்வூதியம் வழங்கப்படும். மாநில அரசுகள் சார்பிலும் இழப்பீடு அளிக்கப்படும். வாரிசுகளின் உயர்நிலை கல்விக்காக ஆண்டுக்கு ரூ.25,000 முதல் ரூ.50,000 வரையும், பெண் வாரிசுகளின் திருமணத்துக்கு ஒரு லட்சமும் வழங்கப்படும். வீர மரணம் அடைந்த வீரர்களின் மனைவிகளின் உயர் கல்விக்காக ஆண்டுக்கு ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும். வீரமரணம் அடைந்த வீரர்களின் வாரிசுகளுக்கு மத்திய சுகாதரத்துறை சார்பில் 42 MBBS இடங்கள், 3 பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

தங்கம் வாங்க இதுதான் செம சான்ஸ்.. தொடர்ந்து விலை குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..

Wed Feb 15 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.42,520-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]
gold

You May Like