இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதியுதவி எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.
தொன்மை சிறப்புமிக்கத் தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிடத் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பெயன்பெறும் வகையில் நபர் ஒருவருக்கு ரூ.10,000/- வீதம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் கலைஞர்கள் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்றவராகவும், பதிவினைப் புதுப்பித்தவராகவும் இருத்தல் வேண்டும். 18 வயது நிரம்பிய நண்பராகவும், 60 வயதுக்குட்பட்ட நபராக இருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றது. தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்பும் கலைஞர்கள் சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10-க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலும் அளிக்கலாம். அல்லது உறுப்பினர்-செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை-600 028 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 – 24937471 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.