fbpx

கேஸ் சிலிண்டர் பெற இனி கைரேகை அவசியம்!! வருகிறது புதிய திட்டம்

இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கியதும், அவர்களது வங்கிக் கணக்குக்கு மத்திய அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது.

மேலும், ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ்,வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 41 லட்சம் இலவச பயனாளிகள் உள்ளிட்ட மொத்தம் 2.33 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக, அவர்களின் கைவிரல் கைரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கி உள்ளன.

மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது எரிவாயு இணைப்புடன் அவர்களது கைரேகையை மின்னணு முறையில் (E-KYC) பதிவு செய்ய வேண்டும். இது தவிர முக பதிவு மூலமாகவும் வாடிக்கையாளர்களின் சரிபார்ப்பு உறுதி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது ஏஜென்சிக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும். ஏஜென்சிக்கு செல்ல முடியாத மூத்தக் குடிமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் மொபைல் போன் செயலி மூலம் முகம் பதிவு செய்யப்படுகிறது.

மேலும், இந்த நடைமுறைக்கு எவ்வித கால கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. கைரேகை பதிவு செய்யவில்லை என்றாலும் தொடர்ந்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். இதற்காக, வாடிக்கையாளர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அத்துடன், இந்த நடைமுறைக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இலவசமாக செய்து தரப்படும்.மேலும், கைவிரல் பதிவு செய்ய வரும் ஊழியர்கள் மீது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் தங்களது கேஸ் ஏஜென்சி அல்லது எண்ணெய் நிறுவனங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Read More: சொகுசு கார்… அதுவும் ரோல்ஸ் ராய்ஸ் கார் காவல்துறை வாகனமாம்…..

Baskar

Next Post

கொத்து கொத்தாக போன உயிர்கள்!… 500ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!… பரிதவிக்கும் மக்கள்!

Mon May 13 , 2024
Flood:ஆப்கானிஸ்தான், பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 490 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களை அழித்துள்ளது, 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன மற்றும் கால்நடைகள் அழிந்துவிட்டன என்று தலிபான் நடத்தும் அகதிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடும் மழை வெள்ளதால் பாக்லான் […]

You May Like