fbpx

Chennai: செய்தியாளர் மீது FIR பதிவு…! திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்…! அண்ணாமலை அதிரடி…!

செய்தியாளரை தாக்கிய திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவுக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தில், நேற்றைய தினம், தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தியதை, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் செந்தில் குமாரை, அறையில் அடைத்து வைத்து, திமுகவினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து, அவர் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தற்போது, 55 வயது பெண்மணி ஒருவரை, செந்தில் குமார் மீது போலியான புகார் கொடுக்க வைத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானது.

காவல்துறை, சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர, திமுக கட்சியின் ஒரு பிரிவாக அல்ல. உடனடியாக, செந்தில் குமார் மீது பதிவு செய்துள்ள பொய்யான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், செந்தில் குமாரைத் தாக்கிய திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்..

Vignesh

Next Post

EPS: இது தமிழ்நாடா..? இல்ல போதை பொருள் மொத்த விற்பனை கிடங்கா..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

Sat Mar 2 , 2024
நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா..? என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் நேற்று இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க போதை பொருட்கள் கண்டெடுக்க பட்டிருப்பது […]

You May Like