fbpx

பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த வெடி விபத்தின் காரணமாக பட்டாசு ஆலையின் 7 அறைகள் தரைமட்டமாகியுள்ளன.

முதற்கட்ட தகவலாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த ஆலையில் பாட்டாசுகள் வெடித்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

Kathir

Next Post

BoB மொபைல் செயலி மீதான தடையை நீக்கியது ரிசர்வ் வங்கி.. வாடிக்கையாளர்கள் குஷி..!

Thu May 9 , 2024
வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிரத்யேக செயலிகளை அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ‘BoB வேர்ல்ட்’ என்ற செயலியை பேங்க் ஆஃப் பரோடா அறிமுகம் செய்தது. மேலும் அந்த மொபைல் ஆப்-இல், பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வங்கி தரப்பில், அங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் ஏஜென்ட்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்த ஆப்-இல் […]

You May Like