fbpx

மணிப்பூர் ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு!. 11 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!.

Terrorists killed: மணிப்பூரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதில், 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மணிப்பூரில் மெய்தி – குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக மாறியது.

இந்த வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் பகுதியில் சி.ஆர்.பி.எஃப். பாதுகாப்பு படையினருக்கும், குக்கியினத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினருக்கும் இடையே இன்று (11.11.2024) மதியம் மோதல் சம்பவம் நடைபெற்றது.

அதாவது ஆயுதக் குழுவினர் இரு திசைகளில் இருந்து காவல் நிலையத்தில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியபோது இந்த மோதம் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த என்கவுன்டரில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த என்கவுண்டர் சம்பவத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவரும் படுகாயமடைந்தார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவத்தில் 11 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Readmore: உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!. தமிழகம் நோக்கி வரும் புயல்!. இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

English Summary

11 Kuki militants killed in Manipur after attacking Army camp, 1 jawan injured

Kokila

Next Post

ஐஐடி மெட்ராஸ் & இஸ்ரோ இணைந்து நடத்தும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சி...!

Tue Nov 12 , 2024
Thermal science research jointly conducted by IIT Madras & ISRO

You May Like