fbpx

“முதலில் இந்த ரூல்ஸ்-ஐ மாத்தணும்..!” இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்வது என்ன?

இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாராயணமூர்த்தி இந்தியாவின் கல்வி நிலையங்களில் உள்ள பழமையான விதிகள் மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இன்ஃபோசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தொழில் முனைவு குறித்தும் தொழில்களை மேம்படுத்துவது குறித்தும் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் பெரிய அளவில் கவனம் பெறும். அந்த வகையில் இன்ஃபோசிஸ் அறிவியல் அறக்கட்டளை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாராயணமூர்த்தி இந்தியாவின் கல்வி நிலையங்களில் உள்ள பழமையான விதிகள் மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், பெரும்பாலான தொழில் முனைவோர் பெரிய அளவிலான தொகையை கைகளில் வைத்திருக்க மாட்டார்கள், அவர்களிடம் பங்குகளே இருக்கும். எனவே கல்வி நிறுவனங்கள் பங்குகளை நன்கொடைகளாக பெற்றுக் கொள்ளும் வகையில் மாற்றங்களை கொண்டு வருவது காலத்தின் கட்டாயம் என நாராயணமூர்த்தி கூறியுள்ளார். மேலும், இந்த பழமையான விதிகள் மாற்றப்பட வேண்டும் என்றும் இந்த நவீன காலத்தில் கூட ஒரு தொழில் முனைவோரால் பங்குகளை நன்கொடையாக வழங்க முடியாத சூழல் இந்தியாவில் தான் நிலவுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பேசிய இன்ஃபோசிஸ் துணை நிறுவனரான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் “அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களை பாருங்கள், எம்ஐடி, ஹார்வேர்ட், ஸ்டான்போர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் லட்சக்கணக்கான டாலர்களில் நன்கொடைகள் கிடைக்கின்றன.

ஆனால் இந்தியாவில் நம்முடைய பல்கலைக்கழகங்களும் நிதி நிறுவனங்களும் பெரும்பாலும் அரசின் நிதியை சார்ந்திருக்கின்றன .கல்லூரிகளில் தொழில்துறையின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் ,அதற்கு ஏற்ற வகையில் தொழில் துறையினர் பங்குகளை நன்கொடையாக வழங்கும் பொருட்டு மாற்றங்களை கொண்டு வருவது அவசியம்” என கூறியுள்ளார்.

’சினிமாவுல வாய்ப்பு வேணும்னா அட்ஜஸ்ட்மெண்ட் பண்ணனும்’..!! நடிகை தீபா பாலு ஓபன் டாக்..!!

Next Post

’இந்த மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்கள் யாரும் வராதீங்க’..!! ஆட்சியர் எச்சரிக்கை..!!

Fri May 17 , 2024
இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இதற்கிடையே, மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு மிக கனமழை முதல் அதிகனமழை வாய்ப்புக்கான “Red Alert” எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை […]

You May Like