சவுதி அரேபியா நாட்டைச் சார்ந்த பெண்மணி முதன் முதலாக விண்வெளிக்கு சென்று சாதனை படைக்க இருக்கிறார். சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்மணி ஒருவர் அந்த நாட்டில் இருந்து முதன்முதலாக விண்வெளிக்கு சென்ற பெண்மணி என்ற சாதனையை படைக்க இருக்கிறார். இது தொடர்பாக சவுதி அரேபிய செய்தித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சவுதி அரேபிய நாட்டைச் சார்ந்த ரியானா பர்னாவி என்ற பெண்மணி விண்வெளிக்கு சென்று சாதனை படைக்க இருக்கிறார் என தெரிவித்துள்ளது. மேலும் இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் அலி அல் கர்னி என்பவருடன் இணைந்து பயணிக்க இருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களுடன் விக்கி விச்சன் என்ற நாசாவைச் சார்ந்த முன்னாள் விஞ்ஞானியும் இவர்களுடன் விண்வெளிக்கு பயணிக்க இருக்கிறார். இவர்கள் ஸ்பேஸ் x பால்கன் 9 என்ற ராக்கெட்டின் உதவியுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணிக்க இருக்கிறார்கள். இந்த ராக்கெட் அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட இருக்கிறது .