தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மதுரையிலும், சிவகங்கையிலும் நடைபெற்றது. இந்த விழாவில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காசோலைகளும், பொதுமக்களுக்கு தையல் மெஷின், உடைகள் என நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புஸ்ஸி ஆனந்த், ”தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தளபதி பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் எங்களுடைய முகவரி தளபதிதான்.
அரசியல் தொடர்பான கருத்துக்களை விஜய் தான் தெரிவிப்பார். தளபதியின் ஆலோசனை இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அப்படி செய்யவும் மாட்டோம். தளபதி மிக விரைவில் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார்” என்று தெரிவித்தார்.
Read More : உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்..!! இதை மட்டும் பண்ணுங்க..!!