fbpx

7000 ரன்களை கடந்த முதல் வீரர்!… ஐபிஎல் வரலாற்றில் ’ரன் மெஷின்’ விராட் கோலி புதிய சாதனை!…

ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை பெங்களூரு அணி வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.

16-வது ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அரைசதம் எடுத்து 55 ரன்களில் வெளியேறினார். இந்த மேட்ச்சில் பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை குவித்தது. அதன் பிறகு 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. இந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். இறுதியில் 16.4 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் 187 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இருப்பினும், இந்த போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றுள்ளார். அதன்படி இதுவரை 233 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 46 அரை சதங்களுடன் மொத்தமாக 7036 ரன்களை குவித்துள்ளார். மேலும் இந்த வரிசையில் ஷிகர் தவான் 6,536 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்திலும், டேவிட் வார்னர் 6,189 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்திலும், ரோகித் சர்மா 6,063 ரன்கள் எடுத்து நான்காம் இடத்திலும் சுரேஷ் ரெய்னா 5528 ரன்களுடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கிறார்.

Kokila

Next Post

தமிழகம் முழுவதும் இன்று காலை காலை 9:30 மணிக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்...! எப்படி பார்ப்பது...?

Mon May 8 , 2023
12-ம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணி அளவில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் 12-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள்‌ இன்று காலை 9.30 மணி அளவில்‌ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்‌ வெளியிடுகிறார்‌. தேர்வு முடிவுகள்‌ மாணவர்கள்‌ ஏற்கனவே பதிவு செய்துள்ள எண்ணிற்கு SMS மூலம்‌ அனுப்பி வைக்கப்படும்‌. மேலும்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, […]
’எங்கள் ஆட்சியில் வேட்டியை யாராலும் கழட்ட முடியாது’..! அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேச்சு..!

You May Like