விஜய் சுவற்றுக்குள் அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “ஆளுங்கட்சி தங்களுடைய பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள எதையாவது ஒன்றை சொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள். எப்போதுமே மத்திய அரசை குற்றம் சாட்டும் தமிழ்நாடு அரசு என்ன செய்கிறது? இந்தியாவில் அதிக கடன் இருக்கக்கூடிய மாநிலமே தமிழ்நாடுதான்.
தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து – முஸ்லீம் மக்கள் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இத்தனை வருடம் இல்லாத பிரச்சனை இப்போது வந்துள்ளது. இதற்கு பின்னால் நிச்சயம் அரசியல் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்திற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நடிகர் விஜய்யை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தவர் விஜயகாந்த் தான். அவர் எங்கள் வீட்டு பிள்ளை. சினிமா வேறு அரசியல் வேறு. இதை விஜய் இடமே பலமுறை தெரிவித்துள்ளேன். சினிமாத் துறையில் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றால், நாம் அவரை பாராட்ட வேண்டும். என்ன சாதிக்கப் போகிறார்; என்ன சரித்திரம் படைக்கப் போகிறார் என்பதை பார்க்க நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம். அரசியலில் நிலைத்து நிற்க விஜய் சுவற்றுக்குள் அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும். பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ”எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல”..!! நடிகர் வடிவேலு இவ்வளவு மோசமானவரா..? ஒன்று திரண்ட கிராம மக்கள்..!!