fbpx

நாட்டிலேயே முதல்முறை..!! 4 நாள் சிசுவின் உடல் உறுப்புகள் தானம்..!! எங்கு தெரியுமா..?

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களிடம் இருந்து அரசு நேரடியாக தானம் பெற்று உறுப்புகள் தேவைப்படுபவருக்கு கொடுக்கிறது. உடல் உறுப்புகள் செயலிழக்கும் போது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து அந்த உறுப்பை புதுப்பித்துக் கொள்ளும் அளவிற்கு மருத்துவ தொழில்நுட்பம் தற்போதைய காலக்கட்டத்தில் வளர்ந்துள்ளது.

இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், கண்கள், கைகள் உள்ளிட்ட பல உறுப்புகளை தானமாக பெற முடியும். இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் மூளைச் சாவு அடைந்த 4 நாள் சிசுவின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அக்டோபர் 13ஆம் தேதி பிறந்த குழந்தையிடம் எந்த அசைவும் இல்லாததால் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து, இரண்டு சிறுநீரகம், இரண்டு கருவிழி, கல்லீரல், மண்ணீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. நாட்டிலேயே சிசுவிடம் இருந்து உறுப்பு தானம் பெறப்பட்டது இதுதான் முதல்முறை என கூறப்படுகிறது.

Chella

Next Post

14,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கும் நோக்கியா நிறுவனம்..!! விற்பனை சரிந்ததால் அதிரடி முடிவு..!!

Thu Oct 19 , 2023
பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா, 14,000 தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக பின்லாந்தை சேர்ந்த நோக்கியா இருந்து வருகிறது. நோக்கியா தயாரிக்கும் செல்போன்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. பின்லாந்து மட்டுமின்றி அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் நோக்கியாவிற்கு அலுவலகங்கள் உள்ளது. இதில், […]

You May Like