fbpx

மீன் பிரியர்களே உஷார்.. அதிகளவில் ரசாயணம் கலப்பு.. மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்..

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நீனா மாம்பில்லி.. புற்றுநோயியல் நிபுணரான இவர், வழக்கமான வாங்கும் கடையில் இருந்து மீன் வாங்கி வந்துள்ளார். அந்த மீனில் ஏதோ பிரச்சனையாக இருப்பதாக உணர்ந்த அவர், அவற்றை ஆய்வகத்தில் பரிசோதிக்க முடிவு செய்தார்.. ஆய்வின் முடிவில் அந்த மீன் துண்டுகளில்ஃபார்மலின் என்ற ரசாயனம் கலந்திருப்பதை கண்டுபிடித்தார்.. ஃபார்மலின் என்பது உணவுப் பொருட்களைப் பாதுகாக்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகும்.. இது இறுதிச் சடங்குகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது..

மேலும் இந்த ஃபார்மலின் உணவு சந்தைப்படுத்தல் துறையில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்கள் இந்திய உணவு பாதுகாப்பு அமைப்பு (FSSAI) தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ரசாயனத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.. அதிக அளவில் உணவில் ஃபார்மால்டிஹைட் இருப்பது கடுமையான வயிற்று வலி, வாந்தி, கோமா, சிறுநீரக பாதிப்பு மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது..

தனது சந்தேகங்கள் உறுதி செய்யப்பட்டவுடன், டாக்டர் நீனா தனது கண்டுபிடிப்பை மற்ற மருத்துவ நிபுணர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் பரிசோதித்த மீனின் படத்தையும், ஆய்கத்தில் இருந்து பெறப்பட்ட ஊதா நிற கரைசலையும் மருத்துவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்தார்.. இதனால் அதிர்ச்சியடைந்த சக மருத்துவர்கள் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மேலும் பலருடன் பகிர்ந்து கொண்டனர்.. இதுகுறித்து பேசிய நீனா “ ஒரு துண்டு மீனில் மிகப்பெரிய அளவு ஃபார்மலின் இருந்தது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..

கொரோனா ஊரடங்கு போட்டப்பட்ட போது கடல் உணவுத் தொழிலில் ஃபார்மலின் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை FSSAI உறுதிப்படுத்தியது. மீன்களில் ஃபார்மலின் கலப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கேரள உணவுப் பாதுகாப்புத் துறை சிறப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. எனினும் மீனில் ஃபார்மலின் கலப்பது தொடர்கதையாகி வருகிறது..

Maha

Next Post

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி…..! வெற்றி பெறுமா இந்தியா அணி….?

Fri Jan 27 , 2023
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் பங்கேற்க உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அந்த அணியை ஒய்ட் வாஷ் செய்தது. இதனைத் தொடர்ந்து முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகின்றது. இந்திய அணியை பொறுத்தவரையில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழி […]

You May Like