fbpx

இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை…

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 23-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 -37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.. எனவே வரும் இன்று முதல் 3 நாட்களுக்கு, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

பள்ளி கழிவறையில் மாணவி தற்கொலை; கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்..!

Wed Sep 21 , 2022
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் பசுவந்தனை சில்லாங் குளத்தில் இயங்கிவரும் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறையில் அந்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை கொண்டார். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தகவல் அறிந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு தெளிவான தகவல் தரவில்லை என […]

You May Like