fbpx

Fishing: குமரி பகுதியில் இன்று முதல் 60 நாட்கள் மீன்பிடிக்க தடை..!

குமரி பகுதியில் மீன்பிடி தடைக்காலம் துவங்கியது.

தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையில், கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு முறைச்சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020-ன் படி, ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை இறுதி வரை 60 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இக்காலகட்டம் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலகட்டம் என்பதால், மீன்வளத்தைப் பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் துவங்க உள்ளது. எனவே, விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடைசெய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம்(லைட் ஹவுஸ்), குளச்சல், தேங்கபட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் இன்று முதல் ஜூலை 31-ம் தேதி வரையும் மீன்பிடி தடைக் காலம் அமலில் இருக்கும்.

Vignesh

Next Post

மக்களவை தேர்தல்!... எக்சிட் போல்கள் எவ்வாறு செய்யப்படுகின்றன!… அதன் வரலாறு, புள்ளிவிவரங்கள் எப்படி துல்லியமாக உள்ளன!

Sat Jun 1 , 2024
Exit polls: மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை அவற்றின் முடிவுகளுக்கு முன்பே வெளியிடும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் இருந்து வருகிறது. பல சமயங்களில் அவையும் தவறு என்று நிரூபணமாகிறது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை (ஜூன் 01) நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் இன்று மாலை வாக்குப்பதிவு முடிவதற்குள், […]

You May Like