ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் எல்லை பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக ராணுவத்தினருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இன்று காலை 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்று காஷ்மீர் ஏடிஜிபி விஜயகுமார் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அந்த பகுதிகளில் தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.