டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தனர். வாகன போக்குவரத்து வழக்கத்தை விடவும் மெதுவாகவே காணப்பட்டது. விமான சேவை போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. மோசமான வானிலையின் காரணமாக, விமானங்கள் சரியான நேரத்தில் புறப்படுவதில் சிரமம் ஏற்பட்டது.
பயணிகள் முன்பதிவு செய்து இருக்கின்ற விமானங்களுக்கான பயண நேரம் தொடர்பாக அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
டெல்லியில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மே மாதம் 30 ஆம் தேதி வரையில் வெப்ப அலை இருக்காது என்றும் கணித்திருக்கிறது.