fbpx

தனுஷ் மகன் மீது பாயும் நடவடிக்கை..!! வீடியோ வைரலானதை அடுத்து வந்த சிக்கல்..!!

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது. கடந்த ஒரு வருடமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். பள்ளிப்படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது, இருவரும் பிள்ளைகளுடன் தனியாக நேரம் செலவிடுவது என இவர்களது பெற்றோர்கள் நன்கு கவனித்துவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்னும் 18 வயது நிரம்பாத தனுஷின் மூத்த மகன் யாத்ரா பைக் ஓட்டும் புகைப்படம்தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. போயஸ் கார்டன் பகுதியில் யாத்ரா R15 பைக்கை ஓட்டி பழகிக்கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் தெரிகிறது. அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக் கொடுக்கிறார். அவர் பைக் ஓட்டுவதை ஒருவர் வீடியோ எடுக்க உதவியாளர் போட்டோ, வீடியோ எடுக்காதீர்கள் என்று கூறுகிறார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் ’18 வயதே ஆகவில்லை. அதற்குள் அப்படி பைக் ஓட்ட வேண்டும் என்றால் யாரும் இல்லாத இடத்தில் தான் ஓட்டி பழக வேண்டும். லைசென்ஸ் உரிமை இல்லாமல் இந்த பைக்கை ஓட்டி பழகுவது தவறானது’ என விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் ஒருசிலரோ, ‘மிகவும் மெதுவாக தெருக்களில் தான் அவர் ஓட்டி பழகுகிறார். கற்றுக்கொள்வது ஒரு தவறா?’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் பரவிய வீடியோவில் இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட் சரியாக தெரியவில்லை என்பதாலும், மேலும், நடிகர் தனுஷ் மகன் ஓட்டப்பட்டதாக சொல்லப்படும் இளைஞர் முகத்தில் மாஸ்க் அணிந்திருப்பதாலும் யார் என்பதை உறுதி செய்வதற்காக நடிகர் தனுஷ் வீட்டிற்கு சென்று விசாரணை செய்துவிட்டு வந்ததாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளனர். மேலும் நடிகர் தனுஷ் மகன் இருசக்கர வாகனம் ஓட்டியது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு...! தமிழக அரசுக்கு எதிராக கொதித்து போன அன்புமணி ராமதாஸ்...!

Sat Nov 18 , 2023
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 விழுக்காடும், ப்ராஜெக்ட் கட்டணம் 100 விழுக்காடும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.450லிருந்து 650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. […]

You May Like