fbpx

நாடு முழுவதும் முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது கவனம்…! மத்திய அரசு அதிரடி…!

இறக்குமதி சுமையை குறைப்பதற்காக முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீது கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ் மருந்துகள் துறை உற்பத்தித் தொடர்பான ஊக்கத்தொகை திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கு 6 ஆண்டு காலத்திற்கு ரூ.15,000 கோடிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்க வந்துள்ள 55 விண்ணப்பங்களில் 20 குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களும் அடங்கும்.

விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் 2022-2023 நிதியாண்டில் ரூ.2,200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்து ஓராண்டு காலகட்டத்தில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மேலும் 1900 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புற்றுநோய் பாதுகாப்பு சம்மந்தமாக ரேடியோ தெரபி மருத்துவ உபகரணங்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

”இனி உங்களுக்கு இவ்ளோ தான் சம்பளம்”..!! அடுத்த அதிர்ச்சி கொடுத்த விப்ரோ நிறுவனம்..!! கலக்கத்தில் ஊழியர்கள்..!!

Wed Feb 22 , 2023
புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவிகிதம் வரை விப்ரோ நிறுவனம் குறைத்துள்ளது. கொரோனா தொற்று சமயத்தில் அதிகப்படியான ஆட்களை வேலைக்கு எடுத்த தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. கூகுள், மெட்டா, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் என பல முன்னணி நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை கொத்து கொத்தாக பணியில் இருந்து நீக்கி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஏற்கனவே ஆட்குறைப்பு […]

You May Like