fbpx

உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!! வீட்டிலேயே செய்யலாம்..!!

உங்கள் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர இந்த ஹெல்த் மிக்ஸ் கஞ்சியை செய்து கொடுங்கள்.

குழந்தைகளுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், பல்வேறு வகையான நோய் பாதிப்புகள் ஏற்படும். எனவே, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க ஹெல்த் மிக்ஸ் பாலை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வாருங்கள்.

தேவையான பொருட்கள் :

சாமை – 1/4 கப், வரகு – 1/4 கப், வெள்ளை சோளம் – 1/4 கப், பாதாம் பருப்பு – 1/4 கப், முந்திரி பருப்பு – 1/4 கப், வேர்க்கடலை – 1/4 கப், ராகி – 1/4 கப், பார்லி – 1/4 கப்

செய்முறை :

* ஒரு வெள்ளை காட்டன் துணியில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு ஒரு நாள் முழுவதும் காயவைத்து கொள்ளவும்.

* பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து காய வைத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு வறுத்து ஆறவிட வேண்டும்.

* பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவிட்ட பொருட்களை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இந்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை :

* அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி நன்கு சூடுபடுத்திக் கொள்ளவும்.

* பிறகு அரைத்த ஹெல்த் மிக்ஸ் பவுடர் 2 தேக்கரண்டி அளவு சேர்த்து ஒரு கரண்டி கொண்டு கலந்து விடவும்.

* ஹெல்த் மிக்ஸ் பொடி பாலில் நன்கு கலந்து கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

* இந்த பாலை காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் குழந்தைகளுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் கிடைக்கும்.

Read More : தேர்தல் முடிந்ததுமே பொதுமக்களுக்கு காத்திருக்கும் ஷாக்கிங் நியூஸ்..!! கட்டணம் அதிரடியாக உயருகிறது..!!

Chella

Next Post

பாஜகவை நுழைய விடக்கூடாது!… இருப்பதையும் இழக்க நேரிடும்!… ஸ்டாலின் அதிரடி பேச்சு!

Sat Apr 13 , 2024
Stalin: அமைதியை விரும்பும் கோவை மக்களே பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி, வளர்ச்சி என அனைத்தும் போய்விடும் என்று முதலமைச்சர் மு.கஸ்டாலின் கடுமையாக பேசியுள்ளார். கோவையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய முதல்வர், பாஜக, பிரதமர் மோடி, அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை கடுமையாக […]

You May Like