fbpx

உங்கள் வீட்டு சுவிட்ச் போர்டை பளிச்சென்று மாற்ற இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க..!! ரொம்ப ஈசி தான்..!!

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகின்றனர். ஆனால், சுவிட்ச் போர்டில் உள்ள கறையை நீக்குவது கஷ்டமாகவே உள்ளது. பெரும்பாலான வீடுகளில் சுவிட்ச் போர்டுகள் கருப்பாகவே உள்ளன. ஏனென்றால், தினமும் டிவி அல்லது ஃபேன், பல்பு அல்லது டியூப் லைட்டை இயக்க சுவிட்ச் போர்டைத் தொடுகிறோம். எனவே, அதை சுத்தம் செய்ய சில எளிய குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மின் இணைப்பை துண்டிக்கவும் :

சுவிட்ச் போர்டை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, சுவிட்ச் போர்டை சுத்தம் செய்வதற்கு முன் மின் இணைப்பை துண்டிப்பது மிகவும் அவசியம். இது மின்சார அதிர்ச்சியில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். சுவிட்ச் போர்டை சுத்தம் செய்வதற்கு முன் கையுறைகள் மற்றும் ஸ்லீப்பர்களை அணியவும்.

வினிகரைப் பயன்படுத்தலாம் :

சுவிட்ச் போர்டில் உள்ள எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களின் மஞ்சள் கறைகளை நீக்க வினிகரின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு, ஒரு கப் தண்ணீரில் 2 தேக்கரண்டி வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கலவையில் பருத்தி துணியை நனைத்து நன்றாக பிழிந்து கொள்ளவும். பின் இந்த கலவையை கொண்டு சுவிட்ச் போர்டை சுத்தம் செய்யவும்.

பேக்கிங் சோடா :

சுவிட்ச் போர்டு கருமையை நீக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இதற்கு இரண்டு மூன்று டீஸ்பூன் பேக்கிங் சோடாவில் அரை எலுமிச்சையை பிழியவும். பிறகு இந்தக் கலவையை சுவிட்ச் போர்டில் தடவி உலர்ந்த துணியால் துடைத்து போர்டை சுத்தம் செய்யலாம். சில நிமிடங்களில் சுவிட்ச் போர்டில் உள்ள அழுக்குகளை நீக்கி, போர்டை புதியது போல் ஜொலிக்க வைக்கிறது.

நெயில் பாலிஷ் ரிமூவர் :

சுவிட்ச் போர்டை சுத்தம் செய்ய நெயில் பாலிஷ் ரிமூவர் அல்லது ஆல்கஹால் பயன்படுத்தலாம். இந்த பொருட்கள் சுவிட்ச் போர்டு அழுக்குகளை சுத்தம் செய்யவும், போர்டை புதியது போல் பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகின்றன.

உடனே மின்சாரத்தை இயக்க வேண்டாம் :

சுவிட்ச் போர்டை சுத்தம் செய்தவுடன் உடனடியாக மின்சாரத்தை இயக்க வேண்டாம். சுத்தம் செய்த அரை மணி நேரம் கழித்து இயக்கவும். பவரை ஆன் செய்வதற்கு முன், போர்டை மீண்டும் உலர்ந்த காட்டன் துணியால் துடைத்து, சுவிட்ச் போர்டு முற்றிலும் காய்ந்துவிட்டதா என சரிபார்ப்பது அவசியம்.

Chella

Next Post

உங்கள் நகங்கள் இந்த மாதிரி இருக்கா..? அப்படினா இந்த நோய் இருக்கு..!! அசால்டா இருக்காதீங்க..!!

Mon May 1 , 2023
ஆரோக்கியம் தொடர்பான பல விஷயங்கள் நம் விரலில் இருக்கும் நகங்கள் மூலம் அறியப்படுகின்றன. மேலும், இவற்றை ஆன்மீகத்துடனும் இணைத்து பல தகவல் சொல்லப்படுகிறது. கையின் கோடுகளைப் போலவே, நகங்களில் உள்ள நிறம், புள்ளிகள் மற்றும் அவற்றின் நீளம், அகலம் ஆகியவை உங்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் பற்றி கூறும் என ஜோதிடம் கூறுகிறது. சொத்தையான நகம் : யாருடைய நகங்கள் மஞ்சள் நிறமாக மாறுகிறதோ அல்லது விரைவாக உடைகிறதோ, அப்படிப்பட்டவரின் […]

You May Like