fbpx

சில்லறை விலையை குறைப்பதற்காக கோதுமை, அரிசி விற்பனை…! இந்திய உணவுக் கழகம் அறிவிப்பு…!

இந்திய உணவுக் கழகம் வெளிச்சந்தையில் சில்லறை விலையைக் குறைப்பதற்காக கோதுமை, அரிசி விற்பனையை அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய உணவுக் கழகம் தனது செய்தி குறிப்பில்; இந்திய உணவுக் கழகத்தின், தமிழ்நாடு மண்டலம் சார்பில் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் கோதுமையை நியாயமான சராசரி தரம், கோதுமையை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழும், வர்த்தகர்களுக்கான அரிசி ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட மொத்த கொள்முதல் செய்வோர், வர்த்தகர்கள், கோதுமை, அரிசி உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்ய உள்ளது.

இந்திய உணவுக் கழகமானது வாராந்திர திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்) மின் ஏல முறையில் முன்பே நிர்ணயிக்கப்பட்ட இருப்பு விலையில் நடத்துகிறது. கோதுமை மற்றும் அரிசியின் தற்போதைய சந்தை விலை முறையே கிலோவுக்கு ரூ.44 மற்றும் ரூ.52 ஆகும். சந்தையில் விலையை உறுதிப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி எஃப்.சி.ஐ அரிசி மற்றும் கோதுமையை வழங்குகிறது. தமிழக மண்டலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமை, அரிசி விற்பனைக்கு மின் ஏல முறையில் டெண்டர் விடப்படுகிறது.

27.10.2023 தேதியிட்ட டெண்டருக்கு 10,000 மெட்ரிக் டன் கோதுமை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் மற்றும் கோதுமையை நியாயமான சராசரி தரத்திலும் வழங்கப்படுகின்றன. இதில் தஞ்சாவூர் கோட்ட அலுவலகத்தின் கீழ் உள்ள கிடங்குகள் 300 மெட்ரிக் டன் கோதுமை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்) கீழ் பரிந்துரைக்கப்பட்ட இந்திய உணவுக் கழக கிடங்குகளிலிருந்து ஒரு டெப்போவுக்கு ஒரு நபருக்கு 10 மெட்ரிக் டன் முதல் 100 மெட்ரிக் டன் வரை கோதுமையை வாங்க விரும்பும் சிறு (தனியார்) வணிகர்கள் குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் கோதுமைக்கு கிலோவுக்கு ரூ.21.25 என்ற விகிதத்தில் மின் ஏலத்தில் பங்கேற்கலாம். மொத்தமாக கொள்முதல் செய்வோர், வர்த்தகர்களை பணியமர்த்தும் செயல்முறை, வாராந்திர மின்-ஏலங்கள், எம்.டி.எஃப், டிப்போ வாரியாக வழங்கப்படும் அளவு மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிய, ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் www.fci.gov.in அல்லது http://www.valuejunction.in/fci ஆகிய இணையதளங்களை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று சிக்கன் வாங்குபவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!

Sun Oct 29 , 2023
சைவ உணவை விட அசைவ உணவை விரும்புபவர்களே அதிகம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே காலையில் முதல் வேலையாக கடைக்கு சென்று கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவது பலரின் வழக்கம். அப்படி பலர் விரும்பும் உணவாக இருப்பது கோழிக்கறி தான். புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிடாமல் ஏங்கி கிடந்த பலர், புரட்டாசி முடிந்ததும் அசைவ உணவு சாப்பிடுவது அதிகமாகியுள்ளதால் தற்போது கோழிக்கறியின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 4 நாட்களில் […]

You May Like