மராட்டிய மாநிலம் புனேவில் கல்லூரி மாணவிக்கு உணவு டெலிவரி செய்ய சென்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார்.
புனேவில் கோந்த்வா பகுதியில் தனியார் பொறியில் கல்லூரியில் படிப்பவர் 19 வயது இளம் பெண். செயலி மூலமாக இரவு உணவு ஆர்டர் செய்துள்ளார். இரவு 9 மணி அளவில் ரயீஸ் சைக் என்ற இளைஞர் உணவு டெலிவரி செய்ய வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு மாணவியிடம் பேச்சு கொடுக்க தொடங்கியுள்ளார் .
ஒரு டம்ளர் குடிக்க தண்ணீர் கிடைக்குமா என கேட்டுள்ளார். தண்ணீர் கொடுத்தவுடன் குடித்துக்கொண்டே மாணவியின் விவரத்தை விசாரித்துள்ளார். சொந்த ஊர் எது , எந்த கல்லூரியில் படிக்கின்றாய். என விவரங்களை கேட்டுள்ளார். ’’ நான் உனக்கு மாமா மாதிரி , நீ என்னிடம் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேள் .. ’’ என கூறியுள்ளார். செல்போனில் மெசேஜ் செய்துள்ளார். என் நம்பரை சேமித்து வைத்துக்கொள் தேவைப்படும் என கூறியுள்ளார்.
பேசிக்கொண்டே ’’ இன்னொரு டம்ளரில் தண்ணீர் கிடைக்குமா என கேட்டுள்ளார். ’’ மாணவி தண்ணீர் கொடுத்ததும் கையைப் பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். உடனடியாக அந்த மாணவி அலாரத்தை அழுத்தியுள்ளார். இதையடுத்து அந்த நபர் தப்பி ஓடியுள்ளார். இருப்பினும் அக்கப்பக்கத்தில் இருந்து வந்தவர்கள் அவனை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து மாணவி கொடுத்த புகாரில் அந்த நபர் மீது வாக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.