ஓயாத AK குரல், குறையாத உற்ச்சாகம், தாரை தப்பட்டை, DJ, 80 அடி கட் அவுட், மாலை என வேலூரில் தொடரும் துணிவு பட கொண்டாட்டம். கேரள செண்டை மேளம் மற்றும் தாரை தப்பட்டையுடன் வேலூரில் தொடங்கியது துணிவு பட கொண்டாட்டம்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படம் நாளை உலகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது. அதே சமயம் விஜய் நடித்த வாரிசு படமும் நாளை ரிலீஸ் ஆக உள்ளதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் துணிவு படத்திற்கான சிறப்பு காட்சி ஜனவரி- 11 காலை 1 மணிக்கும், வாரிசு படத்திற்கான் சிறப்பு காட்சி காலை 4 மணிக்கும் திரையிட உள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஆஸ்கார் திரையரங்கில் நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் இன்று நள்ளிரவு 1.00 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் திரையரங்கு வளாகத்தில் கொண்டாட்டத்தை ரசிகர்கள் தொடங்கியுள்ளனர்.
திரையரங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 70 அடி உயர பிரமாண்ட கட்அவுட்டுக்கு KGF BGM தெறிக்க மாலை அணிவிக்கப்பட்டு கற்பூர ஆராதனை எடுத்து தேங்காய், பூசணிக்காய் உடைத்த ரசிகர்கள். சுமார் 500 பேருக்கு திரையரங்க வளாகத்திலேயே உணவு தயாராகி வருகிறது. சிறுவர்களின் பரத நாட்டியம், தாரைதப்பட்டை, கேரள செண்டை மேளம் என திரையங்கை AK முழக்கத்தோடு நடமாடி வரும் ரசிகர்கள் என திருவிழா கோலம் பூண்டுள்ளது.